News August 17, 2024
வன்முறையில் பாஜகவுக்கு தொடர்பு: மம்தா

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையை பாஜக மற்றும் சிபிஎம் கட்சியினர் இணைந்து சூறையாடியதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு பேரணி நடத்திய அவர், பெண் மருத்துவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கும், மருத்துவமனையை தாக்கியவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். முன்னதாக, கொலை நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவமனையை நள்ளிரவில் மர்ம நபர்கள் சூறையாடினர்.
Similar News
News December 7, 2025
அலர்ட்.. 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க
News December 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 7, கார்த்திகை 21 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 1.30 PM – 2.30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News December 7, 2025
ஷேக் ஹசினா எத்தனை நாள் இந்தியாவில் இருப்பார்?

ஷேக் ஹசினா விரும்பும் வரை இந்தியாவில் இருக்கலாம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா வந்துள்ளார். அந்த காரணங்கள் சரியாகும் வரை இங்கு இருப்பது அல்லது திரும்பி செல்வது என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அதேவேளையில், வங்கதேசத்தின் ஜனநாயக அரசியல் செயல்முறைகளை இந்தியா ஆதரிப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


