News November 23, 2024
மகாராஷ்டிராவில் பாஜக முன்னிலை

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலை வகிக்கத் தொடங்கியிருக்கிறது. 8.30 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 72 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
Similar News
News January 10, 2026
புலி பட வழக்கு: விஜய் பதிலளிக்க உத்தரவு

‘புலி’ படத்திற்கு பெற்ற ₹15 கோடி வருமானத்தை விஜய் மறைத்ததாக கூறி ₹1.50 கோடி அபராதத்தை IT விதித்திருந்தது. இதை எதிர்த்து HC-ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், காலதாமதமாக அபராதம் விதிக்கப்பட்டதாக விஜய் தரப்பில் வாதிட்டனர். ஆனால் அபராதம் விதித்ததில் எந்த தவறும் இல்லை என IT தெரிவித்துள்ளது. இதனையடுத்து விஜய் தரப்பில் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்ட செய்தி நேற்று இரவு வெளியானது.
News January 10, 2026
14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு; IMD

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என IMD கணித்துள்ளது. இதனால் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்.
News January 10, 2026
காலையில் 8 மணிக்கே சாப்பிடனுமா?

காலை உணவு என்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்தும் முதல் கட்டமாகும். அதனால், காலை உணவை எவ்வளவு சீக்கிரம் சாப்பிடுகிறோமோ, அவ்வளவு உடலுக்கும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். முக்கியமாக காலை 8 மணியளவில் காலை உணவு சாப்பிடுவது, உடலின் உயிரியல் கடிகாரத்தை சீரமைக்க, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க மற்றும் ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறதாம்.


