News August 17, 2025

காதலிக்காக மனைவியை துடிதுடிக்க கொன்ற BJP தலைவர்!

image

காதலியுடன் பழக மனைவி இடையூறாக இருந்ததால், BJP தலைவர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் அஜ்மீரில் ரோஹித் சைனி (28), சஞ்சுவை(25) கொலை செய்து, அதனை கொள்ளை சம்பவம் போல செட்டப் செய்து நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் ரோஹித்தின் காதலி ரிது சைனியின் (25) வற்புறுத்தலின் காரணமாக, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரோஹித் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது.

Similar News

News April 5, 2026

திருவள்ளூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் அன்புமணி ராமதாஸ்!

image

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி P.V.ரமணா,பொன்னேரி சட்டமன்றத் தொகுதி P.பலராமன், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி V.சுதாகர் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும், ஆவடி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மன் மகேந்திரா தாமரை சின்னத்திலும் நேற்று (ஏப்.04) வாக்கு சேகரித்தார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொணடனர்.

News April 5, 2026

அதிமுகவில் பலர் அதிருப்தி.. செங்கோட்டையன் பரபரப்பு

image

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் பலர் கட்சி மாற தயாராகி வருவதாக செங்கோட்டையன் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். கோபியில் பேசிய அவர், அதிமுகவில் பணம் கட்டிய பலருக்கு சீட்டு தேர்தலில் சீட் தராமல் EPS நாமத்தை கொடுத்துவிட்டார் என்றார். மேலும், கோபிசெட்டிபாளையத்தில் தன்னை நடுத்தெருவில் நிறுத்துவேன் எனக் கூறிய மா.செ., AK செல்வராஜ் தற்போது சீட் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார் என சாடியுள்ளார்.

News April 5, 2026

இது இயேசுவின் வழிக்கு முரணானது: போப்

image

போரில் USA வெற்றிபெற மக்கள் பிரார்த்திக்க வேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பேசியிருந்தார். இந்நிலையில், ஈஸ்டர் திருநாளான வாடிகன் தேவாலயத்தில் பேசிய போப், இதனை கண்டித்துள்ளார். போரை மதரீதியாக இணைப்பது இயேசுவின் வழிக்கு முரணானது என அவர் கடிந்துகொண்டார். மேலும் போரை கைவிட்டு, அமைதி, சமாதானம், மதநல்லிணக்கத்துடன் உலகம் இயங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!