News April 21, 2024
என் கணவரை பாஜக கொல்லப் பார்க்கிறது

அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வாதிகாரத்திற்கு எதிராக I.N.D.I.A கூட்டணி போராடி வருவதாகத் தெரிவித்தார். சர்க்கரை நோயாளியான எனது கணவர் 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால், இன்சுலின் தராமல் அவரை கொல்லப் பார்க்கிறார்கள் என்றார்.
Similar News
News February 4, 2026
தனித்து களம் காண்கிறாரா ராமதாஸ்?

தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க போட்டிபோடும் திமுக & அதிமுக, ராமதாஸை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படும் நிலையில், தனியாகவே களமிறங்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம். அத்துடன், தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அன்புமணி ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி அவரது தரப்பை தோற்கடிக்க ராமதாஸ் எண்ணுவதாக கூறப்படுகிறது.
News February 4, 2026
பிரேமலதாவின் கூட்டணி முடிவு.. அதிருப்தியில் தேமுதிக

திருவனந்தபுரத்தில் திமுகவிடம் பிரேமலதா, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, 8 MLA + 1 ராஜ்யசபா MP பதவியை தேமுதிக கேட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், தேமுதிகவுக்கு மரியாதை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என பிரேமலதா அறிவித்தார். ஆனால், தேதியைச் சொல்லியும் அவர் முடிவை அறிவிக்காததால், அக்கட்சியினரே அதிருப்தியில் உள்ளனராம்.
News February 4, 2026
திமுகவுக்கு எதிரான முக்கிய டிஸ்கஷனில் EPS

அதிமுக தலைமை அலுவலகத்தில் EPS தலைமையிலான மா.செ. கூட்டம் தொடங்கியது. இதில், வேட்பாளர் தேர்வு, பிரசார உத்திகள், தேர்தல் வாக்குறுதிகள், தொகுதியில் உள்ள குறைகள் ஆகியவற்றை பற்றி டிஸ்கஸ் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக, தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் மா.செ.க்களை எச்சரிக்கவும், திமுகவுக்கு எதிரான களப்பணியை தீவிரப்படுத்தவும் EPS திட்டமிட்டுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.


