News April 14, 2024
அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கும் பாஜக

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்திப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிப்பதாகவும், நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்களை தீட்டுவதாகவும் சாடினார். மேலும், புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியை சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்றும் அவர் கூறினார்.
Similar News
News January 18, 2026
கோவை மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1). கோவை அரசு தலைமை மருத்துவமனை – 0422-2301393.
2). சிங்காநல்லூர் அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை – 0422-2574391.
3). மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை – 04254-222027.
4). பொள்ளாச்சி அரசு மருத்துவமனை – 04259-229322.
5). வால்பாறை அரசு மருத்துவமனை – 04253-222533.
மிக முக்கிய தொடர்பு எண்களான இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 18, 2026
விவசாயிகளுக்கான மதிப்பு குறைந்து வருகிறது: கார்த்தி

விவசாயிகளை இச்சமூகம் பெரிதாக அங்கீகரிப்பதில்லை என கார்த்தி கவலை தெரிவித்துள்ளார். உழவன் விருதுகள் விழாவில் பேசிய அவர், விவசாயிகளுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தாலும், அவர்களுடைய உழைப்பு ஒருபோதும் நின்றுவிடவில்லை என கூறியுள்ளார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோரை சமூகம் கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News January 18, 2026
திமுக கூட்டணியில் விசிகவால் ஏற்பட்ட திருப்பம்

அன்புமணி அதிமுக பக்கம் சென்றுவிட்டதால், ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவார் எனப் பேசப்படுகிறது. இதனால் விசிகவை சமரசம் செய்யும் வேலையில் திமுகவினர் இறங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சாதிய பாமக கட்சியுடன் எப்போதும் உறவு கிடையாது என விசிகவின் வன்னியரசு கூறியுள்ளார். இது, ராமதாஸ் மூலம் வடமாவட்டங்களில் பலம்பெற நினைத்த திமுகவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.


