News April 14, 2024
அதிமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு பாஜக காரணம்

அதிமுக யார் தலைமையில் இயங்க வேண்டும் என்பதை தங்களது கட்சியின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அண்ணாமலை அல்ல என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 2021இல் பாஜக உடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இன்று அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும். ஆட்சி அமையாமல் போனதற்கு பாஜக தான் காரணம். அதிமுக குறித்து பேச அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் கிடையாது என விமர்சித்தார்.
Similar News
News November 6, 2025
பிரபல நடிகர் காலமானார்… குவியும் இரங்கல்

புற்றுநோய் பாதிப்பால் காலமான பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய்(55) மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். KGF படத்தில் காசிம் சாச்சா பாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஹரிஷின் மறைவு பெரும் சோகம் என்றும், அவரது இழப்பு கன்னட திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாதது எனவும் கர்நாடக DCM சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். RIP
News November 6, 2025
வெள்ளை முடியை பிடுங்கினால் உண்மையில் என்ன ஆகும்?

வெள்ளை முடியை பிடுங்கினால் நிறைய வெள்ளை முடிகள் வரும் என்பார்கள். அது உண்மை இல்லை. ஆனாலும், வெள்ளை முடிகளை பிடுங்கக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். ஏனென்றால், வெள்ளை முடியை பிடுங்கினாலும் அந்த வேர்க்காலில் இருந்து மீண்டும் வெள்ளை முடிதான் முளைக்குமாம். அத்துடன், தொடர்ந்து முடியை பிடுங்கி வந்தால் அந்த இடத்தில் முடியே வளராமல் போகலாம் என எச்சரிக்கின்றனர். SHARE.
News November 6, 2025
ஹைட்ரஜன் குண்டு அல்ல, சிறிய பட்டாசு: ஃபட்னாவிஸ்

ஹரியானாவில் வாக்குத்திருட்டு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, அதனை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதை ஹைட்ரஜன் குண்டை வீசுவதாக குறிப்பிட்டிருந்தார். ராகுலின் குற்றச்சாட்டு ஹைட்ரஜன் குண்டு அல்ல, சிறிய பட்டாசு என்று மகா., CM தேவேந்திர ஃபட்னாவிஸ் விமர்சித்துள்ளார். ராகுலின் குற்றச்சாட்டு, இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்க விரும்பும் வெளிநாட்டு சக்திகளின் திட்டத்துடன் ஒத்துப்போவதாக குறிப்பிட்டார்.


