News March 29, 2024

சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி பாஜக

image

சமூக நீதி பேசும் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிராக உள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரி பிரசாரத்தில் பேசிய அவர், உடன்பாடு இல்லாமல்தான் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சென்றார் என பாமகவினருக்கே தெரியும். சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி தான் பாஜக என விமர்சித்தார். மேலும், பாஜகவிடம் இருந்து இந்தியாவை காக்க வேண்டும் எனவும் அவர் சூளுரைத்தார்.

Similar News

News September 19, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 19, புரட்டாசி 3 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.

News September 19, 2025

பாலியல் வழக்கில் சமிர் மோடி கைது

image

முன்னாள் ஐபிஎல் சேர்மன் லலித் மோடியின் தம்பி சமிர் மோடி டெல்லி ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு தருவதாக கூறி பெண் ஒருவருக்கு சமிர் மோடி, தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டலும் விடுத்துள்ளார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சமீர் மோடி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் பணம் பறிப்பதற்காகவே புகாரளிக்கப்பட்டுள்ளதாக சமிர் மோடி தரப்பு கூறுகிறது.

News September 19, 2025

OTT-ல் வெளியாகும் மகா அவதார் நரசிம்மா

image

மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று நரசிம்ம அவதாரம். இதனை மையமாக கொண்டு ‘மகா அவதார் நரசிம்மா’ என்ற படம் வெளியானது. ₹13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ₹300 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்தது. அனிமேஷன் படமாக வெளியானதால், குழந்தைகள் உள்பட அனைவரும் ரசித்தனர். இந்நிலையில், இந்தப் படம் நாளை முதல் Netflix தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகிறது.

error: Content is protected !!