News October 1, 2025
தங்கம் விலை உயர்விற்கு பாஜக காரணம்: அகிலேஷ் யாதவ்

தங்கம் விலை உயர்விற்கு பாஜக அரசு காரணம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பாஜகவினர் தங்களது கருப்பு பணத்தை தங்கமாக மாற்றும் தங்கமயமாக்கல் முறையினால் தான், விலை உயர்வதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தையால் விலை தீர்மானிக்கப்படுகிறது என்றால், எந்த பொருளாதார விதி மற்றும் கொள்கையின் கீழ், ஆடம்பர உலோகங்களின் விலைகள் உயர்கின்றன என்பதை அரசாங்கம் வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 1, 2025
காதலி வீட்டின் சுவர் ஏறி குதித்த காதலன் சாவு

ஒடிசாவில் காதலி அழைத்ததால் அவரது வீட்டிற்குச் சென்ற காதலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலி வீட்டின் சுவர் ஏறி குதித்தபோது, காதலன் பிஸ்வாஜித் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே, பிஸ்வாஜித் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, காதலியின் குடும்பத்தினரிடம் போலீஸ் விசாரித்து வருகிறது. So sad.
News October 1, 2025
செப்டம்பரில் ₹1.89 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

செப்டம்பர் மாதத்தில் ₹1.89 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது 2024 செப்டம்பரை காட்டிலும் 9.1% அதிகமாகும். அதேபோல், தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ₹1.8 லட்சம் கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. நடப்பு நிதியாண்டு தொடங்கிய கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் மட்டும் ₹10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்ட ஜிஎஸ்டி வசூலை காட்டிலும் 9.9% அதிகமாகும்.
News October 1, 2025
டி20 ஏலத்தில் விலை போகாத அஸ்வின்

ILT20 ஏலத்தில் EX-CSK வீரர் அஸ்வினை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. அஸ்வினின் அடிப்படை ஏலத் தொகையாக 1,20,000 டாலர்கள் (₹1.06 கோடி) நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முதல் சுற்றில் அவரை யாரும் வாங்க முன்வரவில்லை. இதே போல டெம்பா பவுமா, ஜேசன் ராய், ஜேம்ஸ் ஆண்டர்ஸன் ஆகிய வீரர்களும் ஏலம் போகவில்லை. எனினும், இறுதிச் சுற்றில் பணம் கையிருப்பிலுள்ள அணிகள் அஸ்வினை வாங்க வாய்ப்புகள் உள்ளன.