News April 12, 2024
கோவையில் பாஜக கலவரம் செய்ய நினைக்கிறது

தோல்வி பயத்தில் கோவையில் வெளிமாநில ஆட்களை ஊடுருவ செய்து பாஜக கலவரத்தை உருவாக்கலாம் என்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “கோவை அமைதியை விரும்பும் நகரம். இங்கே பாஜகவின் ரௌடிஸ அரசியல் எடுபடாது. ஆளுங்கட்சியாக நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறோம். பாஜக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு சாதகமான நிலையை ஏற்படுத்த முயல்கிறது” என்றார்.
Similar News
News July 6, 2025
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கமா?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை கடுமையாக விமர்சித்ததால் அதிமுகவிலிருந்து <<16962233>>அன்வர் ராஜா<<>>வை இபிஎஸ் நீக்கினார். அதன்பின் இபிஎஸ்ஸிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அண்மையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது மீண்டும் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததை கடுமையாக சாடியிருக்கிறார். இதனால், அவர் மீது இபிஎஸ் நடவடிக்கை ( கட்சியில் இருந்து நீக்கம்) எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News July 6, 2025
பாஜகவின் திட்டம் பலிக்காது: அன்வர் ராஜா பாய்ச்சல்

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு கிடைக்காது எனவும் சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார். இது, கூட்டணியிலிருந்து பாஜகவை கைகழுவும் முடிவோ? என பலரும் கருத்து கூறுகின்றனர்.
News July 6, 2025
உங்க ஆதார் தவறாக யூஸ் பண்றாங்க என சந்தேகமா?

உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் ★<