News May 18, 2024
பாகிஸ்தான் அணுகுண்டை கண்டு பாஜக பயப்படாது

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரோ, பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் அப்பகுதியை கேட்க வேண்டாம் என கூறுகிறார், ஆனால், பாகிஸ்தானிடம் உள்ள அணுகுண்டை கண்டு பாஜக அஞ்சாது, அப்பகுதியை மீட்போம் என்றார்.
Similar News
News March 28, 2026
டிரம்ப்-மோடி தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்

போரைத் தொடர்ந்து டிரம்ப்பும் மோடியும் சமீபத்தில் தொலைபேசியில் பேசினர். இந்த உரையாடலில் எலான் மஸ்க் பங்கேற்றது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. எந்தவொரு அரசாங்க பதவியையும் வகிக்காத ஒரு தனிநபர், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது மிகவும் அரிதானது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை குறித்து பேசும்போது மஸ்க் ஏன் பங்கேற்றார் என்பது குறித்து தெளிவான எந்த தகவலும் இல்லை.
News March 28, 2026
வரலாற்றில் இன்று

➤1737 – மராட்டிய பேரரசுக்கும் முகலாய பேரரசுக்கும் இடையே முதல் டெல்லி போர் நடைபெற்றது. ➤1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்ஸை சேர்ந்த ஹென்றி ஃபேப்ரே படைத்தார். ➤2005 – இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1000 பேர் வரை உயிரிழந்தனர். ➤1982 – நடிகை சோனியா அகர்வால் பிறந்த தினம். ➤2006 – வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள்.
News March 28, 2026
CINEMA 360°: SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ்?

▶ SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
▶ ‘தி டார்ம்’ படத்தில் முனிஷ்கான் கதை நாயகனாக களமிறங்குகிறார்.
▶ ‘யூத்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ₹28 கோடி வசூல் செய்துள்ளதாம்.
▶ தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.


