News March 12, 2025
இபிஎஸ்சை நெருங்கும் பாஜக.. அப்போ ஓபிஎஸ் கதி?

2026 தேர்தலில் அதிமுக, பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கக்கூடும் என தகவல் வெளிவருகிறது. இதை உறுதி செய்வதுபோல, இபிஎஸ்சை பாஜக மூத்த தலைவர்கள் அண்மையில் சந்தித்துள்ளனர். இதை உற்றுநோக்கும் அரசியல் ஆர்வலர்கள், பாஜகவுடன் கைகோர்த்து செயல்படும் ஓபிஎஸ் கதி இனி என்னவாகும்? இபிஎஸ், ஓபிஎஸ், ஒரே கூட்டணியில் இணைவார்களா? இல்லை ஓபிஎஸ் தனித்து போட்டியிடுவாரா? எனக் கேள்வி எழுப்புகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News March 12, 2025
சாதி அடையாளத்தை அழித்த கலெக்டர்!

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முன்தினம் 11ஆம் வகுப்பு மாணவன் தேவேந்திரனை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவன் படித்த பள்ளிக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் இன்று சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளி சுவர்களில் சில சாதி அடையாளங்கள் வரையப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், மாணவர்களை வைத்தே அதை அழிக்கச் செய்தார்.
News March 12, 2025
2025 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 1.05 லட்சத்தை தாண்டும்?

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பங்குச்சந்தை முதலீடு கணிப்பு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, சென்செக்ஸ் 2025 டிச.க்குள் 1.05 லட்சத்தை தாண்டும் என கூறியுள்ளது. இது தற்போதைய நிலவரத்தை விட 41% அதிகம். இதேபோல், 2024 டிசம்பரிலும் அது கணித்திருந்தது. உலக அரசியல் சில நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்குமெனவும் தெரிவித்துள்ளது.
News March 12, 2025
IPL: சிஎஸ்கே அணி போட்டி டிக்கெட் விலை ரூ.1.23 லட்சம்

IPLஇல் சேப்பாக்கத்தில் வரும் 23ஆம் தேதி நடக்கும் போட்டியில் மும்பை அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்காத போதிலும், சில இணையதளங்களில் மறைமுகமாக டிக்கெட் விற்பனை நடக்கிறது. இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.17,804 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.1.23 லட்சமாகவும் உள்ளது. நீங்கள் டிக்கெட் வாங்கி விட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க.