News October 1, 2025
விஜய்யின் பின்னால் பாஜக உள்ளது: சிவசங்கர்

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்டாலின் உதாரணமாக உள்ளதாக SS சிவசங்கர் கூறியுள்ளார். அதேநேரம், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு, யாருக்காக உயிரை இழந்தனரோ, அவரே அங்கிருந்து ஓடிச் சென்றவரே உதாரணமாக உள்ளதாகவும் சாடியுள்ளார். பாஜகவின் நெருக்கடியால் விஜய் வீடியோ வெளியிட்டு, சம்பவத்தை திசைதிருப்ப முயல்வதாகவும் விமர்சித்துள்ளார். விஜய்யின் பின்னால் பாஜக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 5, 2026
விழுப்புரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே<
News March 5, 2026
விஜய் வாங்கி கட்டிக்கொள்வார்: ஜெயக்குமார்

எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை சிறப்பாக பேசும் ஒரு நடிகராகவே விஜய்யை பார்க்க வேண்டும் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வது மிகவும் ஈஸி எனக் கூறிய அவர், விமர்சனம் என்ற பெயரில் விஜய் தங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்கொள்வார் என எச்சரித்துள்ளார். மேலும், அரசு பணத்தை எவ்வளவு வாரி இரைத்தாலும் திமுக வெற்றிபெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 5, 2026
2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.


