News April 8, 2024
பாஜக 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்ததா?

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் எனக் கூறும் பாஜக 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்ததா? என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம், பாஜகவிற்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காது என விமர்சித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
நாட்டு மக்களுக்கு சுமார் ₹10,000 வழங்கும் தென் கொரியா

நாட்டு மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க தென் கொரியா புதிய முயற்சி எடுத்துள்ளது. வரும் 21-ம் தேதி முதல் செப். மாதம் வரை அனைவருக்கும் 1,50,000 வோன்(Won) இந்திய மதிப்பில் ₹9,389 கொடுக்க உள்ளது. இதனை நுகர்வு கூப்பனாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் 2023-ம் ஆண்டு நிலவரப்படி 5.17 கோடி மக்கள் உள்ளனர். இந்த மாதிரி ஆஃபர் இந்தியாவிலும் வருமா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News July 7, 2025
இபிஎஸ்-ஐ புறக்கணித்த அண்ணாமலை!

இபிஎஸ்-ன் தேர்தல் பரப்புரை தொடக்க விழாவை அண்ணாமலை புறக்கணித்துள்ளார். கோவையில் இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது பரப்புரையை தொடங்குகிறார். இதில், பாஜக நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். எல்.முருகனுடன் தானும் பங்கேற்கவிருப்பதாக நேற்று நயினார் கூறியுள்ளார். நேற்று திருப்பூரில் திருமண விழாவில் பங்கேற்ற அண்ணாமலை, அருகில் நடக்கும் இபிஎஸ்-ன் நிகழ்வை புறக்கணித்ததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News July 7, 2025
Pressure-ஐ Poem-ஆக மாற்றியவர்… MSD-க்கு CM ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் அணியின் Ex. கேப்டன் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, CM ஸ்டாலின் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், Pressure-ஐ Poem-ஆக மாற்றிய தோனிக்கு ஹேப்பி பர்த்டே என குறிப்பிட்டுள்ளார். மேலும், மகத்துவம் பிறப்பில் வருவதல்ல… ஒவ்வொரு முடிவிலும், ஒவ்வொரு ரன்னிலும், ஒவ்வொரு வெற்றியிலும் கட்டமைக்கப்படுவது என்பதை நிரூபித்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.