News August 26, 2024

கங்கனா வாய்க்கு பூட்டு போட்ட பாஜக

image

கொள்கை ரீதியான கருத்துகளை தெரிவிக்க கங்கனா ரனாவத்துக்கு பாஜக தடை விதித்துள்ளது. சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இந்நிலையில், இது அவரது தனிப்பட்ட கருத்து எனக் குறிப்பிட்டுள்ள பாஜக தலைமை, எதிர்காலத்தில் இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமான மற்றும் மதம் சார்ந்த கருத்துகளை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

ஈரான் அமைதியாக இருக்காது: மசூத் பெசஷ்கியான் எச்சரிக்கை

image

ஈரான் மீது USA, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரானது என அந்நாட்டு அதிபர் பெசஷ்கியான் கூறியுள்ளார். பள்ளி குழந்தைகள், ஹாஸ்பிடல் நோயாளிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும், இது மிகவும் கொடூரமான செயல் என வருந்தியுள்ளார். இதற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், ஈரான் சரணடையாது; அமைதி காக்காது என்றும் எச்சரித்துள்ளார்.

News March 3, 2026

திமுகவை மிரட்டும் காங்கிரஸ்: வானதி சீனிவாசன்

image

2026 தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். விஜய்யை காட்டி திமுகவை காங்கிரஸ் மிரட்டுவதாக குறிப்பிட்ட அவர், ஒரு சில சதவீத வாக்குகளை வைத்துள்ள காங்கிரஸ் இன்றி வெற்றிபெற முடியாத பலவீனமான நிலையில் திமுக இருப்பதாக விமர்சித்துள்ளார். அதனால் தான், CM ஸ்டாலின் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்த்து வருகிறார் என பேசியுள்ளார்.

News March 3, 2026

SPORTS 360°: கேட்ச் பிடிப்பதில் இந்தியா மோசமான சாதனை

image

*போர் காரணமாக ZIM, WI கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர் * போர் பதற்றத்தால் கூடைப்பந்து WC குவாலிஃபையர் போட்டிகளை FIBA ஒத்திவைத்துள்ளது *நடப்பு டி20 WC தொடரில் இந்திய வீரர்கள் 13 கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளனர் *இன்று தொடங்கும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், உன்னதி ஹூடா, மாளவிகா பன்சோத் உள்ளிட்டோர் பங்கேற்பு

error: Content is protected !!