News May 17, 2024
பாஜக வெற்றி பெற பிளான் B இருக்கிறது: அமித் ஷா

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை எட்டாத பட்சத்தில் தங்களிடம் பிளான் B இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பிளான் A வெற்றி பெற 60%க்கும் குறைவான வாய்ப்புகளே இருக்கும் போதுதான் பிளான் B-ஐ பயன்படுத்துவோம் எனவும், ஆனால் அதற்கான தேவை ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். பிளான் B என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்?
Similar News
News January 7, 2026
CM ஸ்டாலின் கார் டயர் வெடிப்பு.. புதிய தகவல்

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு சென்றபோது CM ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தற்போது கார் டயர் மாற்றப்பட்டு, அவர் திருமங்கலத்தில் இருந்து மதுரை ஏர்போர்ட்டுக்கு சென்றதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News January 7, 2026
மெர்சல் படத்துலயே இந்த பிரச்னையை பாத்தாச்சு

‘ஜனநாயகன்’ படத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை 9 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான ‘மெர்சல்’ படமும் சென்சார் சான்றிதழ் பிரச்னையில் சிக்கியது. படம் அக். 18-ம் தேதி வெளியான நிலையில், 17-ம் தேதி மாலைதான் சான்றிதழ் கிடைத்தது. அதை வைரலாக்கும் ரசிகர்கள், கண்டிப்பாக ‘ஜனநாயகன்’ சொன்ன தேதியில் ரிலீசாகும் என நம்புகின்றனர்.
News January 7, 2026
ஜல்லிக்கட்டு வழக்கில் முக்கிய உத்தரவு!

ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என சென்னை HC மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதை எதிர்த்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL மேட்ச் கிடையாது. சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பிரச்னைகள் எழுந்தன. எனவே ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.


