News June 5, 2024

7 மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட வெல்லாத BJP

image

7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாடு, பஞ்சாப், சிக்கிம், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, மணிப்பூர், புதுவை மற்றும் சண்டிகரில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. தமிழகத்தில் திமுக தலைமையிலான INDIA கூட்டணி 39 இடங்களிலும், பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 7, ஆம் ஆத்மி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

Similar News

News March 24, 2026

விளாத்திகுளம் மாணவி கொலை; போலீசார் எச்சரிக்கை

image

விளாத்திகுளத்தை சேர்ந்த +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்களை சமூக ஊடகங்கள், வலைதளங்களில் வெளியிடுவது குற்றமாகும். அதன்படி சிறுமியின் பெயர், புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 22 பேர் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

News March 24, 2026

நெல்லை: வீடு புகுந்து அடுத்தடுத்து நகை, பைக் திருட்டு

image

சாந்தி நகரை சேர்ந்தவர் சங்கர்(65). கிருஷ்ணாபுரம் கலைக் கோவிலில் நகரில் உள்ள இவரது தம்பியின் பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர் புகுந்து 8 பவுன் நகை, ரூ.5000 ரொக்கத்தை திருடிச் சென்றார். இதேபோல் கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரில் ரகு என்பவர் தனது வீட்டின் நிறுத்தி இருந்த பைக்கை மர்மநபர் திருடி சென்றார். இச்சம்பவங்கள் குறித்து சிவந்திப்பட்டி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2026

காலை எழுந்ததும் இவற்றை பார்த்திடவே கூடாது..!

image

காலை எழுந்தவுடன் இந்த 4 விஷயங்களை பார்க்காதீர்கள் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நிழல்: இது அசுபம் எனப்படுகிறது ➤அழுக்கு பாத்திரங்கள்: அழுக்கு பாத்திரங்களை பார்த்தால், பண இழப்பு ஏற்படுமாம் ➤ஓடாத கடிகாரம்: இது வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுத்துமாம் ➤கண்ணாடி: காலையில் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தால், உடனே நிறுத்தி விடுங்கள். இது எதிர்மறை ஆற்றலை உண்டாக்குமாம்.

error: Content is protected !!