News June 16, 2024
தேர்தல் முடிவில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை

சமூக செயற்பாட்டாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்குப் பதிந்ததை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “தேர்தலில் பாஜக பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்குமுறையே ஆயுதம். அடக்குமுறையை எதிர்கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை. தேசம் அருந்ததி ராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 12, 2025
நேபாளில் சிக்கிய இந்தியர்கள் என்ன ஆனார்கள்?

நேபாளில் சிக்கி தவித்த 140 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், பல இந்தியர்கள் எல்லை வழியாக நாட்டிற்குள் வந்துள்ளனர். அதேபோல், அந்நாட்டில் சிக்கித் தவித்த இந்திய வாலிபால் அணி, இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் யாரேனும் சிக்கியிருந்தால், அவர்களையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
News September 12, 2025
கேபிள் நிறுவனத்தில் ₹300 கோடி ஊழல்: EPS

திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், அரசு கேபிள் நிறுவனத்தில் சுமார் ₹300 கோடி அளவுக்கு திமுக அரசு ஊழல் செய்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
News September 12, 2025
இந்தியாவிற்கு விளையாட வரும் ரொனால்டோ?

ஃபுட் பால் லெஜண்ட் கிறிஸ்டியானோ ரொனால்டோ, வரும் அக்டோபரில் இந்தியாவிற்கு வருகை தர வாய்ப்புள்ளது. ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், அல் நசர் அணிக்காக அவர் விளையாடலாம் என கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 22-ம் தேதி இந்த போட்டி நடைபெற உள்ளது. இருப்பினும், இப்போட்டியில் பங்கேற்பது என்பது ரொனோல்டோவின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது.