News August 27, 2024

2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாஜக

image

ஜம்மு & காஷ்மீர் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 15 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், தற்போது 29 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் நிலையில், காங்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இங்கு, செப்.18, 25 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

Similar News

News July 6, 2025

தமிழக அரசில் 2,299 காலியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளது. தகுதி: 10-ம் வகுப்பில் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.4. திறனறிவு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பத்தை நேரடியாக பெறலாம். Share it!

News July 6, 2025

முடிவுக்கு வருகிறதா பாமக பிரச்னை?

image

ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதலால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ஜூலை 8-ல் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இதனால், தந்தை – மகன் இடையே இருக்கும் பிரச்னை முடிவுக்கு வரவிருப்பதாக பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை.

News July 6, 2025

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

image

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விளம்பரங்களிலும் திட்டத்தின் பதிவு எண், க்யூ ஆர் கோடு, குழும முகவரி இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டப் பகுதியின் முகவரியை திட்ட அனுமதியில் உள்ளது போன்று தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!