News December 21, 2024
பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வழக்கு

வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து, பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரியங்கா தனது வேட்புமனுவில் சொத்துகள் தொடர்பான முக்கிய தகவல்களை மறைத்துவிட்டதாகவும், இதன் மூலம் வாக்காளர்களை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் நவ்யா தனது மனுவில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் சட்டங்களை மீறியதால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரியுள்ளார்.
Similar News
News September 4, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 4, ஆவணி 19 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
News September 4, 2025
இந்த பொருள்களுக்கெல்லாம் இனி GST கிடையாது

*33 அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், அரிய நோய்களுக்கான மருந்துகள்.
*தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடுகள்.
*நோட்புக்ஸ், பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்கள்.
*UHT பால், பனீர், பீட்சா பிரட், சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி.
56-வது GST கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்த GST சீர்திருத்தங்கள், செப்.22 முதல் அமலுக்கு வருகிறது.
News September 4, 2025
IPL தொடருக்கு 40% GST வரி

இந்திய ரசிகர்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் IPL உள்ளிட்ட விளையாட்டு தொடர்களுக்கு 40% GST வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளுக்கு இந்த 40% GST என்பது பொருந்தாது. இந்த அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளுக்கான டிக்கெட் ₹500-க்கு அதிகமாக இருந்தால் 18% GST வரி செலுத்த வேண்டும் என்று GST சீர்திருத்தத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.