News June 8, 2024
8 முறை மோடி வந்தும் பாஜக வெற்றி பெறவில்லை: இபிஎஸ்

தமிழகத்திற்கு 8 முறை மோடி தேர்தல் பிரசாரம் செய்ய வந்தும் பாஜக ஓரிடத்தில் கூட வெல்லவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் ஆட்சி அதிகாரம், பண பலத்தை வைத்து பிரசாரம் செய்ததாகவும், ஆனால், அதிமுகவில் தாமும், தேமுதிகவில் பிரேமலதா உள்ளிட்ட சிலர் மட்டுமே பிரசாரம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 10, 2025
ரயில்வே பண்டிகை கால ஆஃபர்

பண்டிகை காலங்களில் டிக்கெட் புக் செய்யும் போது, ரிட்டன் டிக்கெட்டையும் சேர்த்து புக் செய்தால் கட்டணத்தில் 20% தள்ளுபடி செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 13 முதல் 26-ம் தேதி வரை சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் புக் செய்ய வேண்டும். அதன்போதே, நவ., 17 முதல் டிச., 1-ம் தேதி வரையில் ரிட்டன் டிக்கெட்டுக்கான புக்கிங் செய்ய வேண்டும். இதற்கான புக்கிங் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
News August 10, 2025
அமைதி பேச்சுவார்த்தையை வரவேற்ற இந்தியா

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்றுள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அமைதி நிலைநாட்டும் என நம்புவதாக ‘இது போர்களின் காலம் அல்ல’ என்ற பிரதமர் மோடியின் மேற்கோளை சுட்டிக்காட்டி இந்தியா தெரிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் வைத்து டிரம்ப் -புடின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
News August 10, 2025
ஆகஸ்ட் 10: வரலாற்றில் இன்று

*610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். 1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். *1916- தமிழ் எழுத்தாளரும், இதழாசிரியருமான சாவி பிறந்தநாள். *1948 –இந்திய அணுசக்திப் பேரவையை ஜவகர்லால் நேரு துவக்கி வைத்தார். *1990- நாசாவின் மெகலன் விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது.