News April 15, 2025
அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி!

அதிமுக குறித்து அதிமுக <<16095694>>Ex MLA குணசேகரன்<<>> பேசுவது நல்லதற்கு அல்ல என அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாலர் கார்த்திக் மிரட்டல் தொனியில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முடிவு எடுத்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பேசக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அதிமுகவினரை மிகவும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்க கருத்து என்ன?
Similar News
News January 15, 2026
மே.வங்கத்தில் வன்முறை கும்பல் ஆட்சி: ED

மே.வங்கத்தில் <<18797106>>I-PAC<<>> அலுவலக சோதனையை CM மம்தா பானர்ஜி தடுத்ததாக SC-ல் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், ரெய்டின் போது மம்தாவும், போலீசாரும் அத்துமீறி நுழைந்து ஆதாரங்களை திருடி சென்றதாக ED குற்றஞ்சாட்டியதுடன், மே.வங்கத்தில் நடப்பது வன்முறை கும்பலின் ஆட்சி என்றும் விமர்சித்தது. இதற்கு பதிலளித்த மம்தா தரப்பு, தேர்தல் நேரத்தில் கட்சியின் ரகசிய தரவுகளை திருடவே ED திட்டமிட்டதாக வாதிட்டது.
News January 15, 2026
தேர்தல் நோக்கத்தோடு விஜய் இதை சொல்கிறார்: தமிழிசை

தேர்தல் நெருங்குவதால் தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை சொன்னாரா விஜய் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என விஜய் <<18861926>>பதிவிட்டதை<<>> குறிப்பிட்ட அவர், சித்திரை மாதம் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றார். மேலும், விஜய்தான் தவறாக எண்ணி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
ஈரானில் 3,428 பேர் பலி.. நாடே துக்கத்தில் ஆழ்ந்தது

உலகெங்கும் பல இடங்களில் நடைபெற்று வரும் போரால் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஈரானை நிலைகுலையச் செய்துவரும் உள்நாட்டு போரில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,428 ஆக உயர்ந்துள்ளது. அரசுக்கு எதிரான போரில் ஜென் Z தலைமுறையினரின் தீவிர போராட்டத்தில் பொதுமக்களும் சிக்கி உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஈரான் மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


