News March 27, 2024
ராதிகாவை எதிர்த்து பாஜக நிர்வாகி போட்டி

விருதுநகர் தொகுதியில் ராதிகாவை எதிர்த்து பாஜக நிர்வாகி வேதா மனுதாக்கல் செய்துள்ளார். அங்கு வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா, கடந்த இரண்டு நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரை எதிர்த்து விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகி, டெல்லி மோடி பாஜக அணி என்ற பெயரில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் விருதுநகர் பாஜகவின் கோஷ்டி பூசல் வெளிப்படையாக வெடித்துள்ளது.
Similar News
News April 22, 2025
போஸ்ட் ஆபீஸ் வேலைக்கான ரிசல்ட் வெளியானது

போஸ்ட் ஆபீஸில் கிளை போஸ்ட் மாஸ்டர் & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் வேலைக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 21,413 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10-ம் வகுப்பு மார்க் அடிப்படையில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும். முதற்கட்ட பட்டியல் மார்ச் 22-ல் வெளியானது. தற்போது 2-ம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. https://indiapostgdsonline.gov.in/ இணையதளத்தில் அறியலாம்.
News April 22, 2025
சூடுபிடிக்கும் ‘ஜனநாயகன்’ பட வியாபாரம்!

விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை கடும் போட்டி நிலவுகிறதாம். இதில், முன்னிலையில் இருப்பது ரோமியோ பிக்சர்ஸ் எனத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தமிழக உரிமையை ₹90 கோடிக்கு வாங்க அந்நிறுவனம் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படம், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 22, 2025
எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி ரூ.1,000 உயர்வு

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனுடன் நேற்று அச்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விலையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று முதல் (ஏப்.22) எம்.சாண்ட், பி.சாண்ட், கிரஷர் ஜல்லி விலையை ₹1,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.