News April 14, 2024
இவர்களை முன்னிலைப்படுத்தி பாஜக தேர்தல் வாக்குறுதி

பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாடே எதிர்பார்த்து காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் களத்தில் உத்தரவாதமாக அமல்படுத்தியுள்ளதாகக் கூறினார். நாட்டின் தூண்களான பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளை முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News January 1, 2026
மதுரை : ஆட்டோ டிரைவர் வெட்டி கொடூர கொலை

மதுரை அருகே விருசமரத்து ஊரணி பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் முனீஸ்(26) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்றிரவு மதுரை விமான நிலைய சாலையில் தனது சகோதரியுடன் பேசி கொண்டிருந்த போது பெருங்குடியை சேர்ந்த 4 பேர் முனீஸிடம் வாக்குவாதம் செய்து கத்தி, அரிவாள் கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முன்பகை காரணமாக கொலை நடந்ததா என அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 1, 2026
விஜய்யால் பாஜகவுக்கு சவால்: SG சூர்யா

விஜய்க்கு இருக்கும் திரைக்கவர்ச்சி பின்னணி, பாஜக போன்ற பேரியக்கங்களுக்கு சவாலாக இருப்பதாக SG சூர்யா கூறியுள்ளார். திரைக்கவர்ச்சியோ, ஊடகக் கவர்ச்சியோ பாஜகவுக்கு இல்லை என்ற அவர், தவெகவை விடவும் பன்மடங்கு அதிகமாக பாஜக உழைத்தால் மட்டுமே மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும், தீவிரமான களப்பணி மூலமாக ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவோம் என தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(ஜன.1) 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,440-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹320 குறைந்து ₹99,520-க்கு விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளதால் இன்று தங்கம் வாங்க நினைத்தோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


