News January 19, 2025
யாரையும் நம்பி பாஜக இல்லை: அண்ணாமலை

விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை செல்வப்பெருந்தகை ராகுல் மீது வைக்க வேண்டும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். யாரையும் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், காங்கிரஸை போல் பிறரை நம்பி பாஜக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். திமுக வரும் தேர்தலில் நிச்சயம் தோற்கும் என்ற அவர், திமுகவின் ஆட்சி குடும்ப ஆட்சியாக சுருங்கியுள்ளதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News March 11, 2026
போர் கொடூரம்: தனித்து விடப்படும் வாயில்லா ஜீவன்கள்!

போருக்கு மத்தியில் வீடுகளை காலி செய்யும் மக்கள், தங்களது செல்லப்பிராணிகளை கைவிட்டு செல்லும் கொடூரம் துபாயில் அரங்கேறி வருகிறது. நேற்றுவரை அரவணைத்த கைகள் எங்கு சென்றன என்பது புரியாமல் பசியிலும், பயத்திலும் அவை தவிக்கின்றன. யாராவது அரவணைத்து கொள்ள மாட்டார்களா என அவற்றின் கண்களில் தெரியும் ஏக்கம் நெஞ்சை உலுக்குகிறது. போரின் கொடூரம் மனிதர்களை மட்டுமல்ல, வாயில்லாத ஜீவன்களையும் காயப்படுத்தியுள்ளது.
News March 11, 2026
PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

TN-ல் அனைத்து வகை சிலிண்டர்களும் தடையின்றி கிடைப்பதை PM மோடி உறுதிசெய்ய வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனது கடிதத்தில் அவர், உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்மயமான TN பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 11, 2026
₹40,000+ சம்பளம்… 667 பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <


