News February 25, 2025
அதிஷி குற்றச்சாட்டை மறுத்த பாஜக

டெல்லி முதல்வர் அறையில் அம்பேத்கர், பகத்சிங் படங்கள் உள்ளதாக அதிஷி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மியில் கெஜ்ரிவால் மட்டுமே இதுவரை பொய் பேசுவார் என நினைத்திருந்ததாகவும், அவரையே அதிஷி விஞ்சி விட்டதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது. முன்னதாக, டெல்லி முதல்வர் அறையில் AAP ஆட்சியில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர், பகத்சிங் புகைப்படம் அகற்றப்பட்டதாக அதிஷி குற்றஞ்சாட்டியிருந்தார்.
Similar News
News February 25, 2025
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஞானேஷ் குமார்

சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். கும்பமேளாவில் நீராடியது உணர்வுப்பூர்வமாகவும், மனநிறைவை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது.
News February 25, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை – பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி 34 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், சென்னை அணி 24 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
News February 25, 2025
ஒருங்கிணைந்த அதிமுகவே இலக்கு: சசிகலா

வரும் தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என சசிகலா கூறியுள்ளார். உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவே போட்டியிடும் என்றார். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கியே தங்கள் பயணம் இருப்பதாகவும், அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.