News October 25, 2024
பிரியங்கா மீது பாஜக விமர்சனம்

பிரியங்கா காந்தி கணவரின் சொத்து விவரம் போலியானது என பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதில் கணவர் ராபர்ட் வாத்ரா பெயரில் ₹37.9 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ₹27.64 கோடிக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பாஜகவின் விமர்சனத்தை மறுத்துள்ள ராபர்ட் வாத்ரா, உண்மை மக்களுக்கு தெரியும் என்றார்.
Similar News
News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 19, 2025
சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.19) கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, வரும் நாள்களில் வெள்ளியின் விலையில் கணிசமான ஏற்றம் இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
News November 19, 2025
கண்களை பாதுகாக்கும் 7 நட்ஸ் & உலர் பழங்கள்!

இன்றைய சூழலில் அனைவரும் செல்போன், கம்யூட்டர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்நிலையில், அதற்கு இடம் கொடுக்காமல் கண்களை பாதுகாக்க, பார்வை திறனை மேம்படுத்த இந்த 7 நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் உட்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே SWIPE பண்ணுங்க.


