News March 26, 2024
மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்தும் பாஜக

பாஜக அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். பாஜக குறித்து பேசிய அவர், “அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி பாஜக அரசு நாடு முழுவதும் வசூல் செய்கிறது. இரட்டை இலை சின்னத்தை முடக்க பாஜக அரசு முயற்சித்தது. ஆனால், அது முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை” என கூறியுள்ளார்.
Similar News
News February 3, 2026
விஜய், NDA கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம்: FM

விஜய்யின் அரசியல் வருகை & NDA கூட்டணி பலமடைவதை பார்த்து பயப்படுவதால் திமுக இலவசங்களை அறிவிப்பதாக நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் காங்., 2 பிரிவுகளாக உள்ளதாகவும், ஒரு பிரிவு திமுகவுடனும், மற்றொரு பிரிவு தவெகவுடனும் செல்ல சண்டையிடுகிறார்கள்; ஒருவேளை தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை; NDA கூட்டணிதான் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
ராசி பலன்கள் (03.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 3, 2026
இந்தியாவிற்கான வரியை குறைத்தது அமெரிக்கா

ரஷ்யாவுக்கு பதிலாக அமெரிக்கா & வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்க PM மோடி ஒப்புக்கொண்டதாக US அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியா மீதான வரி 25%-ல் இருந்து 18%-ஆக குறைக்கப்படும் என்றவர், USA பொருள்கள் மீதான வரியை 0-ஆக குறைக்க இந்தியாவும் நடவடிக்கை எடுக்கும் என்றார். மேலும் மோடியுடன் தொலைபேசியில் பேசிய அடுத்த சில நிமிடங்களில் டிரம்ப் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


