News June 25, 2024
எம்.பி.,க்களுக்கு உத்தரவிட்ட பாஜக & காங்கிரஸ்

மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளதால் காங்கிரஸ் & பாஜக எம்.பி.,க்கள் அனைவரும் கட்டாயம் அவைக்கு வர வேண்டுமென அக்கட்சிகள் உத்தரவிட்டுள்ளன. சபாநாயகர் பதவிக்கு INDIA கூட்டணி (சுரேஷ்) & NDA கூட்டணி (ஓம் பிர்லா) இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளை காலை 11 மணி அளவில் தேர்தல் நடத்தப்படும் என அறியமுடிகிறது. இந்திய வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
Similar News
News March 2, 2026
PM அலுவலகம் மீது தாக்குதல்: நெதன்யாகுவின் நிலை என்ன?

இஸ்ரேல் PM நெதன்யாகுவின் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் IRGC படை தெரிவித்துள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த நேரத்தில் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா, அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்ததா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் இஸ்ரேலிய விமானப்படை தளபதியின் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
News March 2, 2026
கார் விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. ஒருவர் பலி UPDATE

<<19278785>>கார் விபத்தில் <<>>தனது டிரைவர் முத்து உயிரிழந்தது தொடர்பாக நடிகை தேவிப் பிரியா உருக்கமாக பேசியுள்ளார். முத்து தனக்கு அம்மா மற்றும் தம்பி போன்று இருந்ததாகவும் 15 ஆண்டுகளாக தன்னை கவனித்து வந்ததாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார். ஷூட்டிங்கிற்காக தேனிக்கு சென்று கொண்டிருந்தபோது கார் டயர் பஞ்சரானதாக கூறிய அவர், அப்போது நிறுத்தி வைத்த தனது கார் மீது மற்றொரு கார் மோதியதாக தேவிப் பிரியா தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா ₹16 லட்சம் அபராதம்

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறாததால் பாக்., மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதால், ஒவ்வொரு வீரருக்கும் தலா ₹16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் முடித்தாலும் நெட் ரன்ரேட் காரணமாக பாக்., அரையிறுதிக்கு செல்லவில்லை.


