News June 19, 2024
பாஜக மையக்குழு இன்று ஆலோசனை

தமிழக பாஜகவின் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று கமலாலயத்தில் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. படுதோல்வியடைந்த தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.
Similar News
News September 14, 2025
மனைவியின் குடும்பப் பெயரை கணவர்கள் வைக்கலாம்

இந்தியாவில் திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப் பெயரை தன் பெயருக்கு பின் வைப்பது வழக்கம். இதனை சுற்றி பல விவாதங்கள் நடந்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது, கணவர்கள் தங்கள் மனைவியின் குடும்பப் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொள்வது சட்டப்படி செல்லும் என அறிவித்துள்ளது. ஆண்களே, இந்தியாவில் இந்த சட்டம் வந்தால் உங்கள் பெயரை மாற்றிக்கொள்வீர்களா?
News September 14, 2025
திராவிட மாடலை ஆராயும் வட இந்திய யூடியூபர்கள்: ஸ்டாலின்

2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று CM ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய அவர், வட இந்திய யூடியூபர்கள் திராவிட மாடலை ஆராய்ந்து, அதனை அவர்களது மாநிலங்களில் செயல்படுத்த அறிவுறுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், தெற்காசியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழும் என்றார்.
News September 14, 2025
EPS கையெழுத்திட்டதில் கால்வாசி கூட வரவில்லை: CM

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் பாதிகூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்று CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி அரசு நிகழ்வில் பேசிய அவர், EPS கையெழுத்திட்ட முதலீடுகளில் கால்வாசி கூட வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால், திமுக ஆட்சி அமைந்தபிறகு ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் 77% செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.