News April 25, 2024

லுங்கி அரசியலில் சிக்கிய பாஜக

image

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லுங்கி அணிந்து வீடியோ மூலம் பரப்புரை செய்தார். அதை பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் கிண்டல் செய்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் பிஜூ ஜனதாதளம் கட்சியினர், ஒடிசாவின் பாரம்பரியமான சம்பல்புரி லுங்கி கைத்தறி நெசவையும், கலாசாரத்தையும் பாஜக அவமதித்து விட்டதாக பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

Similar News

News April 5, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.4) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 5, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News April 5, 2026

காதலித்து திருமணம் செய்ய மறுத்தால் குற்றமல்ல: ஐகோர்ட்

image

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தெலங்கானா ஐகோர்ட் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, காதலித்த பிறகு திருமணத்தை மறுப்பது அனைத்து சூழல்களிலும் குற்றம் (அ) மோசடி எனும் பிரிவின் கீழ் வராது என நீதிபதி தெரிவித்துள்ளார். அது வெறும் வாக்குறுதி மீறல் மட்டுமே என்றும் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!