News August 22, 2025

பாஜக முதல்வர்களையே பதவி நீக்கலாம்: பெ.சண்முகம்

image

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன. அந்த வகையில், இந்த மசோதா மூலம் PM மோடி, அமித்ஷா ஆகியோருக்கு பிடிக்காத BJP முதல்வர்களைக் கூட பதவியில் இருந்து நீக்கும் வாய்ப்புள்ளதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக தாங்கள் நினைப்பதை சட்டமாக உருவாக்குவதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்றார்.

Similar News

News April 11, 2026

சோற்றை இப்படி சாப்பிடுவதால் அதிக நன்மை.. CHECK THIS

image

சுட சுட சோறு, குழம்பு என சாப்பிட்டே பழக்கப்பட்டுவிட்டீர்களா? அதற்கு பதில் சாதத்தை சமைத்து, ஆறவைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காலை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள ‘ஸ்டார்ச்’ அதிகரித்து, செரிமானம் மேம்படும். இது சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பதால் சுகர் இருப்பவர்களுக்கும் நல்லது. கூடவே பருப்பு, காய்கறி, தயிரை சேர்த்துக்கொள்ளுங்கள் என டயட்டீசியன்கள் கூறுகின்றனர். SHARE.

News April 11, 2026

FLASH: ஏர் கூலர்கள் விலை ₹15,000 வரை உயர்கிறது!

image

பிளாஸ்டிக், ரசாயனப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக கூலர் விலை 30% – 40% அதிகரிக்கும் என ராம் கூலர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் AC-க்கு மாற்றாக பலரும் ஏர் கூலர் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், மினி கூலர் ₹499- ₹2,000, பர்சனல் கூலர்(20-35L) ₹4,500- ₹9,000, டவர் கூலர்(30-40L) ₹8,000- ₹10,000, டெசர்ட் கூலர்(50-100L) ₹9,000- ₹15,000 வரை விலை உயருமாம்.

News April 11, 2026

வீடு வீடாகச் செல்ல விஜய் அறிவுறுத்தல்

image

தவெகவின் மா.செ.,க்கள் முதல் பூத் நிர்வாகிகள் வரை அனைவரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் பிரசாரம் முடிவடைய 10 நாள்களே உள்ள நிலையில், அனைத்து வேட்பாளர்களுக்கும் பிற நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!