News April 14, 2025
பாஜக கூட்டணி: அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காரைக்கால் தாெகுதி அதிமுக EX MLA கே.ஏ.யு. அசனா நேற்று முன்தினம் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், புதுக்கோட்டை நகர அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது கனியும், இதே காரணத்துக்காக அக்கட்சியிலிருந்து இருந்து விலகியுள்ளார். தனது விலகல் கடிதத்தை புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் விஜயபாஸ்கருக்கு அவர் அனுப்பியுள்ளார்.
Similar News
News November 21, 2025
2-வது டெஸ்ட்: கேப்டன் சுப்மன் கில் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18331700>>கழுத்து வலிக்கு<<>> சிறப்பு சிகிச்சை பெற அவர் மும்பை சென்றுள்ளதாகவும், பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை தொடங்கும் கவுஹாத்தி டெஸ்டில் கேப்டனாக பண்ட் செயல்படுவார் என்றும், பேட்டிங் வரிசையில் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.
News November 21, 2025
BREAKING: விலை ₹7,000 குறைந்தது

வெள்ளி விலை 2 நாள்களில் கிலோவுக்கு ₹7,000 குறைந்துள்ளது. நேற்று(நவ.20) ₹3,000 குறைந்த நிலையில், இன்று ₹4,000 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹169-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,69,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை வரும் நாள்களிலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதால், முதலீடு நோக்கத்தில் வாங்குவோர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.
News November 21, 2025
இறந்த பின்பும் சார்லஸை பழிவாங்கும் டயானா

பாரிஸில் உள்ள கிரெவின் அருங்காட்சியத்தில், பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனின் தற்போதைய அரசரும், EX கணவருமான சார்லஸ், திருமணத்தை மீறிய உறவை ஒப்புக்கொண்ட அன்று, அவரை பழிவாங்க கருப்பு நிற ஆடையை டயானா அணிந்தார். அதே உடையில் தற்போது மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது. 1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


