News March 27, 2024

பணத்தில் படுத்து உருளும் பாஜக கூட்டணி நிர்வாகி

image

அசாமில் உள்ள யுபிபிஎல் கட்சியின் முக்கிய நிர்வாகியான பெஞ்சமின் பசுமத்தாரி, ரூபாய் நோட்டுகளின் மீது படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பி.டி.ஆரின் பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள இந்த நேரத்தில், பாஜக கூட்டணி நிர்வாகியின் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 3, 2026

திமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி.. டிடிவி தினகரன் ஷாக்

image

அமமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான <<19555711>>பார்த்திபன்<<>>, TTV தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளார். ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேல் TTV தினகரன் பற்றியோ அமமுக பற்றியோ தன்னிடம் கேட்க வேண்டாம் என காட்டமாக கூறினார். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து விலகியது TTV தினகரன் தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.

News April 3, 2026

சம்பளத்துடன் கூடிய விடுமுறை: ECI உத்தரவு

image

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. இது அரசு, பொது & தனியார் துறை என அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். ஒருவேளை விடுமுறை அளிக்கப்படாவிடில், தொழிலாளர் நலத்துறை மூலம் அந்தந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து: SC

image

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் சொத்துகளை பறிமுதல் செய்த உத்தரவை SC ரத்து செய்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 2020-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக ED சோதனை நடத்திய நிலையில், கோர்ட் உத்தரவின்படி ₹89.19 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், SC இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

error: Content is protected !!