News April 10, 2025
பாஜக – அதிமுக கூட்டணி உறுதி: அண்ணாமலை

அமித்ஷாவுடன் அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது, கூட்டணிக்கு அவர்கள் ஒப்புக்கொண்டதை தெளிவாக காட்டுவதாக அண்ணாமலை பேசியிருக்கிறார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே பொதுவான குறிக்கோள் என்றும் அவர் கூறியிருக்கிறார். மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணியமைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று காட்டமாக பேசிய அண்ணாமலை, திடீரென பல்டி அடித்திருக்கிறார். உங்கள் கருத்தை சொல்லுங்க.
Similar News
News April 18, 2025
War தந்த வலி.. இந்த ஆண்டின் பெஸ்ட் போட்டோ இதுதான்!

இந்த போட்டோ உங்களை உலுக்காமல் இருக்காது. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த காசா சிறுவனின் போட்டோ தான் World Press Photo of the Year 2025 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய புகைப்படக் கலைஞர் சமர் அபு எலுஃப் எடுத்த போட்டோவில், 2 கைகளையும் இழந்து, முகத்தில் ‘எப்போது இந்த கொடுமை தீருமோ’ என நீங்காத சோகத்துடன் சிறுவன் அமர்ந்திருக்கிறான். உலகின் எதிர்காலத்தை போர்கள் இருட்டில் ஆழ்த்தி விடுகின்றன.
News April 18, 2025
Retire ஆகும் நேரத்தில் ரோஹித்… சேவாக் சொன்ன பாய்ண்ட்

ரோஹித் ஓய்வு பெறப்போகும் நேரத்தில், ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை கொடுக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். IPL 2025-ல் ரோஹித்தின் பெர்ஃபாமன்ஸ் சீரானதாக இல்லை எனவும், அவர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறுகிறார் என்றும் சேவாக் கூறினார். நடப்பு IPL தொடரில் இதுவரை ரோஹித் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயமே. Retire ஆவதற்கு முன், ரோஹித் மிரட்டலான ஒரு இன்னிங்ஸை ஆடுவாரா?
News April 18, 2025
முதுநிலை நீட் தேர்வு: மே 7 வரை விண்ணப்பிக்கலாம்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத, மே 7-ம் தேதி வரை <