News December 20, 2025

BJP-ன் அனைத்து சதிகளையும் முறியடிப்போம்: CM

image

நம்மை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு மத்திய பாஜக அரசு பல முயற்சிகளை செய்வதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவின் அனைத்து சதிகளையும் முறியடித்து நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். பாஜகவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் திறன் தமிழ்நாட்டுக்கும், திமுகவுக்கும் உள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே மொழி, ஒரே அடையாளத்தை கொண்டு வர முயற்சி நடப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Similar News

News January 2, 2026

இந்திய அணியில் என்ன மாற்றம் செய்யலாம்?

image

வரும் ஜனவரி 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட T20I WC-க்கான அணியில் மாற்றங்கள் செய்யலாம் என ICC தெரிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வலுவாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தாலும், இவருக்கு பதில் இவரை கொண்டுவரலாமே என்ற சில விமர்சனங்களும் உள்ளது. இந்திய அணியில் ஏதாவது மாற்றம் செய்யலாமா அல்லது இந்த அணியே பந்தயம் அடிக்கும் என நினைக்கிறீங்களா?

News January 2, 2026

அரசு ஊழியர்களுக்கு தீர்வு கிடைக்குமா?

image

<<18733786>>இடைநிலை ஆசிரியர்கள்<<>> கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட கூட்டமைப்புகள் ஜன.6 முதல் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளன. ஆய்வறிக்கை பரிசீலனைக்கு பின் ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி கூட்டமைப்புகளுடன் அமைச்சர் எ.வ.வேலு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

News January 2, 2026

இன்று முதல் இலவச தரிசனம்

image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (ஜன.2) முதல் ஜன.8-ம் தேதி வரை நேரடி இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பதிவு டோக்கன் இல்லாமலேயே நேரடியாக வந்து சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம். இலவச தரிசனம் என்பதால், நேற்று முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருப்பதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது.

error: Content is protected !!