News December 6, 2024

‘பிட்காயின்’ மதிப்பு ₹84 லட்சமாக உயர்வு… காரணமென்ன?

image

கிரிப்டோகரன்சி மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காயின்’ மதிப்பு, முதன் முறையாக ஒரு லட்சம் டாலரை (₹84 லட்சம்) கடந்துள்ளது. கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருப்பதே இந்த மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமென சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், இந்த மின்னணு கரன்சிகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 22, 2025

BREAKING: தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்தது

image

தங்கத்தின் விலை இன்று(டிச.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,360-ஆக உயர்ந்துள்ளது. காலை சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் ₹720 அதிகரித்துள்ளது. இதன் மூலம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ₹1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் தங்கம் 1 கிராம் தங்கம் ₹12,570-க்கு விற்பனையாகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News December 22, 2025

தவெக ஒரு கலப்பட கட்சி.. EPS ரியாக்‌ஷன்

image

விஜய் தான் CM வேட்பாளர் என TVK உறுதியாக கூறியதால், கூட்டணி பேச்சை அதிமுக கைவிட்டது. இந்நிலையில் விஜய்யை மறைமுகமாக EPS விமர்சித்துள்ளார். தவெக ஒரு தூய சக்தி என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, அக்கட்சி தூய்மையானதா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என அவர் பதிலளித்துள்ளார். <<18633602>> TVK-வை கலப்பட கட்சி <<>>என கே.பி.முனுசாமி விமர்சித்ததை சுட்டிக்காட்டி, அது அழகான கருத்து என்றும் EPS பேசியுள்ளார்.

News December 22, 2025

₹1 ரீசார்ஜுக்கு 30 நாள்கள்.. பம்பர் ஆஃபர்!

image

புதிய யூஸர்களை கவரும் வகையில் BSNL தொடர்ச்சியாக கவர்ச்சிகரமான ஆஃபர்களை அளித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கிறிஸ்துமஸ் & புத்தாண்டு பரிசாக, ஃப்ரீ சிம் கார்டுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 2 GB டேட்டா & 100 SMS-களை 30 நாள்களுக்கு வெறும் ₹1-ல் வழங்குகிறது. சிம் ஃப்ரீ என்றாலும், இந்த ஆஃபர்களை பெற, ₹1 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். இச்சலுகை ஜனவரி 5 தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

error: Content is protected !!