News September 18, 2025
கையில் Bitcoin.. 12 அடிக்கு டிரம்ப்பின் சிலை!

கிரிப்டோகரன்சியை ஆதரித்து வரும் US அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு முதலீட்டாளர்கள் 12 அடி உயர சிலை அமைத்துள்ளனர். வாஷிங்டன் DC-யில் அமைந்துள்ள அமெரிக்க கேபிடல் கட்டடத்திற்கு வெளியே அமைந்துள்ள இந்த சிலையில், டிரம்ப் தனது கையில் Bitcoin-ஐ ஏந்தியுள்ளார். வெள்ளி மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள இந்த சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 7, 2026
சுங்கச்சாவடிகளில் இனி No Cash.. அரசு அதிர்ச்சி அறிவிப்பு

சுங்கச்சாவடிகளில் இனி ரொக்கம் செலுத்தும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. அன்று முதல் FASTag, UPI முறைகளில் மட்டுமே பணப் பரிவர்த்தனை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. FASTag இல்லையெனில் சுங்கச்சாவடியை கடக்க UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆனால், வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ALERT
News April 7, 2026
காலில் விழுவது தமிழர் மரபு: EPS

EPS காலை தேடினார் என உதயநிதி விமர்சித்திருந்தார். இந்நிலையில், காலில் விழுந்து ஆசி பெறுவது தமிழர் மரபு என EPS விளக்கமளித்துள்ளார். திருமணம் முடிந்த தம்பதி பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது போல்தான், ஒரு உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டபோது காலில் விழுந்ததாக கூறிய அவர், உதயநிதி ஆணவமாக பேசி, தரையில் நடக்காமல் தலைக்கணத்துடன் நடப்பதாகவும் விமர்சித்தார்.
News April 7, 2026
நடிகை சுபாஷினி மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

சென்னையில் ஷூட்டிங்கிற்காக தங்கியிருந்த <<19578782>>நடிகை சுபாஷினியின்(36)<<>> தற்கொலை விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுபாஷினி நடிப்பதை அவரது கணவர் பிபின் விரும்பவில்லையாம். இது தொடர்பாக நேற்று வீடியோ காலில் பேசும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பிபின், சுபாஷினியை அவதூறாகப் பேசியதால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தாக கூறப்படுகிறது. எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது.


