News October 22, 2025

வசூல் வரிசையில் இடம்பெற்றது ’பைசன்’

image

தீபாவளி ரேஸில் வெளியான ‘டியூட்’ படம் அதிக வசூலை ஈட்டியிருந்தாலும், அதைவிட ’பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கபடி வீரர் கேரக்டரில் துருவ் விக்ரமும் சிறப்பாக நடித்திருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், இப்படம் வெளியாகி 5வது நாளில் சுமார் ₹22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் பைசன் படம் பார்த்துட்டீங்களா?

Similar News

News March 11, 2026

பத்தாயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்!

image

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து ஜன.31- ம் தேதியுடன் போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். எனினும் அரசு அறிவுறுத்தியும் இன்னும் தங்களின் ஜனவரி மாத சம்பளம் கிடைக்காதது சுமார் 10,000-க்கும் அதிகமான ஆசிரியர்களிடையே அதிருப்தியை அளித்துள்ளது.

News March 11, 2026

விஜய்யிடம் இருந்து விலகினார்.. உடனே புதிய கூட்டணி

image

தவெக கூட்டணிக்கு ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி 8 மாதங்களுக்கு மேல் ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், தவெக கூட்டணியில் இருந்து விலகிய அக்கட்சியின் தலைவர் எம்.எப்.தமீம், R.S.பாரதியை சந்தித்து திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதுகுறித்து எம்.எப்.தமீம், கரூர் விவகாரம் முதல் பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டியும், விஜய் – தவெகவின் செயல்பாடு சரியில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News March 11, 2026

இன்னும் முடியவில்லையா திமுக – காங்., பஞ்சாயத்து?

image

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அறிவாலயத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதாம். அதில், திமுக போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸும் குறிவைப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!