News May 6, 2024
மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’

இயக்குநர் மாரி இயக்கும் புதிய படத்திற்கு ‘பைசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தூத்துக்குடியில் தொடங்க உள்ளதா நிலையில், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
Similar News
News August 23, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 23 – ஆவணி 7 ▶ கிழமை: சனிக்கிழமை ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: பிரதமை ▶ சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
News August 23, 2025
அமெரிக்காவுக்கு குட் பை… ஏஞ்செலினா முடிவு!

ஒரு காலத்தில் மக்களின் கனவுத் தேசமாக இருந்தது அமெரிக்கா. அந்த நாட்டில் குடியேறவே அனைவரும் விரும்பினர். ஆனால், காலம் மாறிவிட்டது. இப்போது அமெரிக்காவில் இருந்து வெளியேறவே பலரும் விரும்புகின்றனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், ஏஞ்செலினா ஜோலியும் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. அரசியல் நிலையின்மை, அதிகரிக்கும் குற்றங்கள், நிதிச்சுமை போன்றவை இதற்கு காரணங்களாகும்.
News August 23, 2025
விபத்தில் உயிரிழந்தால் ₹2 லட்சம்: CM ஸ்டாலின்

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தி வழங்கிட CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை தவிர, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு ₹1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்கு ₹30,000 என்றும், இறுதிச்சடங்குக்கான நிதியுதவி ₹10,000 வழங்கிட CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.