News February 22, 2025

பால் குடித்தால் கூட பறவைக் காய்ச்சல்

image

H5N1 வைரசுக்கு பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று பெயர் இருந்தால் கூட, அது பலவகை விலங்குகளுக்கும் பரவக் கூடியது. குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் இந்த வகை வைரஸ் அதிகம் பரவுகிறது. எனவே, சிக்கன், முட்டைகளைப் போல பால் மூலமாகவும் H5N1 வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். இதற்குத் தீர்வாக, பதப்படுத்தப்பட்ட (pasteurize) செய்யப்பட்ட பாலை மட்டுமே பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Similar News

News February 22, 2025

இந்தியா மீது விரைவில் வரி விதிப்பேன்: டிரம்ப்

image

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் பரஸ்பர வரி விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு எவ்வளவு வரிகளை விதிக்கின்றனவோ, அதே அளவு வரியை அமெரிக்காவும் விதித்து நியாயமான முறையில் செயல்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கால் பதிக்க உள்ள நிலையில், தொழில் செய்வதற்கு இந்திய கடினமான நாடு எனவும் தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

வீட்டிலேயே ஆண்-பெண் பாகுபாடு: நீதிபதி ஆதங்கம்

image

மகன்களை விட மகள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். பாலின சமத்துவம் வீட்டில் இருந்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், பாலின சமத்துவம், பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த நெறிமுறைகளை பள்ளிப்பாடத்தில் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News February 22, 2025

IND vs PAK: மிஸ்ட்ரி ஸ்பின்னரை இறக்கும் ரோஹித்..

image

பெரிதும் எதிர்பார்க்கப்படும் IND vs PAK மேட்ச் நாளை நடைபெறுகிறது. இதில், குல்தீப் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் முதல் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் அவருக்கு பதிலாக அணியில், வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்படலாம் எனப்படுகிறது. அதே போல, ராணாவிற்கு ரெஸ்ட் கொடுத்து அர்ஷ்தீப்பை அணியில் சேர்க்கலாம் என்றும் தகவல் வெளிவருகின்றன. உங்களின் பெஸ்ட் பிளேயிங் XI எது?

error: Content is protected !!