News March 9, 2025
அம்பையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியுள்ளது. களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டம், ஈர நிலங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் பறவைகளை ஆர்வமுடன் கணக்கெடுத்து வருகின்றனர்.
Similar News
News March 9, 2025
உறவுக்கு மறுப்பு.. கொடூரமாக கொலை

செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கத்தை சேர்ந்த சங்கரின் மனைவி செல்வராணிக்கும், குமரேசன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததால், குமரேசன் உடனான உறவை செல்வராணி துண்டித்துள்ளார். உறவுக்கு அழைத்தும் வரவில்லை. இந்நிலையில் நைசாக பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று செல்வராணியை குமரேசன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
News March 9, 2025
நடிகை அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம்!

பிரபல நடிகை அபிநயாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்தது. தனது வருங்கால கணவரும், தானும் நிச்சயதார்த்தம் முடிந்து, கோயிலில் மணி அடிக்கும் அழகிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். தனது பால்யப் பருவ நண்பரை விரைவில் திருமணம் முடிக்கப் போவதாக அண்மையில் பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார். நடிகை அபிநயாவுக்கு வாய் பேச முடியாது மற்றும் காதும் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.
News March 9, 2025
2 மாவட்டங்களில் நாளை விடுமுறை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (மார்ச் 10) விடுமுறை ஆகும். அதேபோல், வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே நடைபெறும் பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.