News August 17, 2024
புவி வெப்பமடைதலை தடுக்கும் பயோ மெட்டீரியல்?

புவி வெப்பமடைதலை வேகப்படுத்துவதில் கார்பன் டை ஆக்சைடு (CO2) முக்கிய பங்குவகிக்கிறது. அதனை சீர்செய்ய இந்திய மாணவர் பிராந்தர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். லண்டன் பல்கலை.,யில் முதுகலை பயிலும் அவர், வளிமண்டலத்தில் இருந்து CO2-வை பிரித்தெடுக்க நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தும் புதிய கட்டுமான பயோ மெட்டீரியலை உருவாக்கியுள்ளார். இது நடைமுறைக்கு வந்தால் கார்பன் தடயத்தை குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
ஆட்சியில் பங்கு; முடிவை அறிவித்த சிபிஎம்

ஆட்சியில் பங்கு கேட்டு கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்துவருவதாகவும், இதனால் அறிவாலயத்தில் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கேட்க மாட்டோம் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News October 15, 2025
Gen Z தீபாவளி மோதல் எப்படி உள்ளது? PR பதில்

விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்கள் தீபாவளி ரேஸில் வெளியாகி, தியேட்டர்களில் வெடி சத்தம் கேட்கும். ஆனால், இந்த முறை Gen Z ஹீரோக்களின் படங்கள் மோதுகின்றன. இதுகுறித்து பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என பதிலளித்தார். தானும் இரு நடிகர்களின் படங்களை மோதலாக பார்த்தவன் தான் என்ற அவர், தன்னுடைய பட ரிலீஸில் அப்படி தெரியவில்லை என கூறினார்.
News October 15, 2025
தலைவலி நீங்க காலையில் இந்த கசாயம் குடிங்க!

இஞ்சி- 2 இன்ச், மல்லி விதை- 1 ஸ்பூன், வெந்தயம்- கால் ஸ்பூன், சீரகம்- 1 ஸ்பூன் ஆகியவற்றை 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும் *பிறகு, தேன் & அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதை தினமும் காலையில் ஒரு வாரம் வெறும் வயிற்றில் பருகினால், பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கம், செரிமானக் கோளாறுகள், தலைவலி ஆகியவற்றை போக்க உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். SHARE.