News March 26, 2025
மாதம் ₹7,000 வழங்கும் ‘பீமா சகி யோஜனா’ திட்டம்

‘பீமா சகி யோஜனா’ திட்டம் கிராமப்புற பெண்கள் LIC காப்பீட்டு முகவர்களாக மாறுவதற்கும், கிராமங்களில் காப்பீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில், பங்கேற்க 18 – 70 வயது வரையிலான 10ஆம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு உதவித்தொகையாக முதல் ஆண்டில் மாதம் ₹7,000, 2ஆம் ஆண்டில் ₹6,000, 3ஆம் ஆண்டில் ₹5,000 வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே <
Similar News
News March 29, 2025
யாரும் நிகழ்த்தாத சாதனை… SIR ஜடேஜாவின் மாஸ்!

இதுவரை, IPL தொடரில் 3000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரர் என்ற வரலாற்றை ஜடேஜா படைத்துள்ளார். அவர் இதுவரை, 242 போட்டிகளில் 3,001 ரன்களும், 160 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஸ்பின் ஆல்ரவுண்டரான ஜடேஜா சென்னையின் அணியின் முக்கிய தூணாகவே இருக்கிறார்.
News March 29, 2025
அதிமுகவில் பஞ்சாயத்து செய்யும் பாஜக

EPSஐத் தொடர்ந்து டெல்லியில் செங்கோட்டையனும் அமித் ஷாவை சந்தித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அமித் ஷாவே அறிவித்திருக்கும் நிலையில், EPS, செங்கோட்டையன் இடையே நிலவும் கருத்து மோதலை பாஜக தீர்க்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. இதே வகையில், ஓபிஎஸ் உடனான கருத்து மோதலையும் பாஜக தீர்த்து வைக்குமா என்ற கேள்வி எழுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?
News March 29, 2025
இந்தியர்களிடம் எவ்வளவு தங்கம் உள்ளது தெரியுமா?

சில நாடுகளின் ரிசர்வ் வங்கியை விட இந்தியர்கள் அதிக தங்கம் வைத்திருப்பதாக HSBC global தெரிவித்துள்ளது. சுமார் 25 ஆயிர டன்களுக்கும் அதிகமான தங்கத்தை இந்தியர்கள் வைத்துள்ளனராம். இவற்றின் மதிப்பு ₹150 லட்சம் கோடி. இது, இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாடுகளின் ரிசர்வ் பேங்குகளில் இருக்கும் மொத்த தங்கத்தையும் விட பல மடங்கு அதிகமாம். எப்படி வாங்குறாங்களோ?