News April 26, 2025
பில்கேட்ஸின் தன்னம்பிக்கை வரிகள்..!

▶ வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தை தூண்டும். ▶ வெற்றியைக் கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் தோல்வியின் படிப்பினைகளைக் கவனிப்பதும் அவசியம். ▶ உலகில் உள்ள எவருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்… அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என அர்த்தம். ▶ பிரச்னைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வையும் தேடுகிறேன்.
Similar News
News April 26, 2025
சர்வதேச விசாரணை கோரும் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பேட்டி ஒன்றில் எந்த ஆதாரமும் இன்றி இந்தியா தங்களை குற்றம்சாட்டி வருவதாக பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். போர் வெடிப்பதை விரும்பவில்லை என தெரிவித்த அவர் போரால் பேரழிவு மட்டுமே ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
News April 26, 2025
25% விலை குறைவான 18 கேரட் தங்கம்.. அதிகரிக்கும் மவுசு

ஆபரண நகைகளில் 22 கேரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் நாணயம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த 2 வகைகளில், 24 கேரட் விலை அதிகமாகும். 22 கேரட் விலை சற்று குறைவாகும். ஆனால் இந்த 2 வகைகளையும் விட 18 கேரட் விலை 25% குறைவு. 24 கேரட், 22 கேரட் விலை அதிகரிப்பதால், அனைவரின் பார்வையும் 18 கேரட் தங்கம் மீது திரும்பியுள்ளது. அதற்கான மவுசும் அதிகரித்துள்ளது.
News April 26, 2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் அஞ்சலி

காலமான கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியனும் அஞ்சலி செலுத்தினர். போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.