News September 27, 2025
பில் கேட்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *நான் கடினமாக உழைக்கிறேன் ஏனெனில் நான் என் வேலையை நேசிக்கிறேன். *ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பணத்தினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. *என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை.
Similar News
News January 1, 2026
ஷாருக் கான் ஒரு துரோகி: பாஜக MLA

அண்மையில் நடந்த IPL மினி ஏலத்தில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை KKR அணி எடுத்திருந்தது. இந்நிலையில் வங்கதேச வீரரை அணியில் சேர்த்ததற்கு உ.பி.,யை சேர்ந்த பாஜக MLA சங்கீத் சோம், KKR அணியின் உரிமையாளர் ஷாருக்கானை கடுமையாக சாடியுள்ளார். வங்கதேசத்தினர் இங்கு விளையாடக்கூடாது என கூறிய அவர், ஷாருக் போன்ற துரோகிகளுக்கு இது தெரிய வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 1, 2026
உங்கள் குழந்தையிடம் இந்த பழக்கம் இல்லையா?

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது நீங்கள் அவர்கள் மீது கோபப்பட்டிருப்பீர்கள். இது தவறு என தெரிந்தும் மன்னிப்பு கேட்காமல் அப்படியே கடந்தும் சென்றிருப்பீர்கள். இதை கவனிக்கும் உங்கள் குழந்தையும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். எனவே, உங்கள் குழந்தையிடம் நீங்கள் முதலில் மன்னிப்பு கேட்டு பழகுங்கள். இதன்மூலம் மரியாதையையும், மன்னிப்பு கேட்கும் குணத்தையும் அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். SHARE.
News January 1, 2026
குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்க நேரமாகுதா?

இட்லி மாவு புளித்தால் மட்டுமே இட்லி பஞ்சு போல மென்மையாக வரும். ஆனால், குளிர் காலத்தில் இட்லி மாவு விரைவாக புளிக்காது. மாவை புளிக்க வைக்க சில டிப்ஸ் இதோ! * மாவை கைகளால் கலக்கும் போது எளிதாக புளிக்கும் *அரிசி அரைக்கும் போது அதனுடன் அவல் அல்லது வடித்த சாதத்தை சேர்த்து அரைக்கவும் *மாவு அரைக்கும் போது சிறிது சூடான நீரை பயன்படுத்தலாம் *மாவு அரைத்த பிறகு அதில் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கலாம்.


