News April 17, 2025
பைக் காதலர்களே இதுதான் சரியான நேரம்! ₹25,000 சலுகை

பைக் காதலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம்! Ninja 300 மாடல் பைக்குகளுக்கு ₹25,000 சிறப்பு தள்ளுபடியை Kawasaki நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும் மே மாதம் வரை மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தள்ளுபடிபோக Ninja 300 மாடல் ₹3.18 லட்சத்திற்கு (EX-Showroom) விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News November 15, 2025
யுனிசெஃப் தூதரானார் கீர்த்தி சுரேஷ்

யுனிசெஃபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். குழந்தைகளின் வளர்ச்சிக்காக 76 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த அமைப்பில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இக்குழுவில் ஏற்கெனவே, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மான் குரானா, கரீனா கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
கரூரில் விஜய் கட்சியினருக்கு அனுமதி

கரூரில் SIR-க்கு எதிரான தவெக ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. கூட்ட நெரிசலுக்கு பின் கரூரில் நடக்கும் தவெகவின் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், மேடை அமைக்க கூடாது, சிறப்பு அழைப்பாளர்கள் வந்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும், கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
News November 15, 2025
₹44,900 சம்பளம், மத்திய அரசு வேலை: APPLY NOW!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: 18- 27. கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி. சம்பளம்: ₹44,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16. ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <


