News October 10, 2025
பிஹாரின் அரசியல் முக்கியத்துவம்: PHOTOS

குறைவான கல்வியறிவு, அதிகமான வன்முறை, மோசமான நிர்வாகத்துக்கு பிஹாரை உதாரணம் காட்டுவது பொதுபுத்தியாக உள்ளது. நாட்டின் 3-வது பெரிய மாநிலமான பிஹார், ஆன்மிக, கலாசார, அரசியல்ரீதியாக இந்திய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. புத்த, சமண மதங்கள் தோன்றிய அங்கு தான் உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது. பிஹாரில் நிகழ்ந்த 3 முக்கிய அரசியல் நிகழ்வுகளை மேலே ஸ்வைப் செய்து பாருங்க.
Similar News
News October 10, 2025
திமுக மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சி?

வாணியம்பாடியை கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கிடம் இருந்து பறிக்க திமுக கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. திருப்பத்தூரின் வாணியம்பாடியில் முஸ்லிம் வாக்குகள் அதிகம். அதனாலேயே முஸ்லிம் லீக் கட்சிக்கு அது ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், தொடர்ந்து 3 தேர்தல்களில் வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் தோல்வி அடைந்துள்ளது. எனவே, இம்முறை திமுகவே நேரடியாக களமிறங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 10, 2025
நேஷனல் Crush என்பது தற்காலிகமானது: ருக்மணி

நேஷனல் Crush என தன்னை அழைப்பது நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் அது தற்காலிகமானதுதான் என நடிகை ருக்மணி வசந்த் தெரிவித்துள்ளார். நேஷனல் Crush என்பது காலத்திற்கு ஏற்றார்போல் மாறக்கூடியது எனவும், ‘சப்த சாகரடாச்ச எல்லோ’ படத்தில் நடித்த ப்ரியா என்ற தன்னுடைய எளிமையான கதாபாத்திரத்தை மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ப்ரியா என அழைப்பது தான் தனக்கு பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 10, 2025
காலை நேரத்திற்கான 5 சக்திவாய்ந்த பழக்கங்கள்!

தினமும் காலை எழுந்திருக்கும் போது, இவற்றை வழக்கமாக்கி கொள்ளுங்க ✦காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிங்க ✦கொஞ்சம் உடற்பயிற்சி ✦ஆரோக்கியமான காலை உணவு ✦கொஞ்சம் டைம் கொடுத்து ஏதாவது புதுசா படிங்க ✦நன்றியுணர்வு ஒவ்வொருவருடைய மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒரு அருமையான வழியாகும். சிம்பிளாக, ‘இன்னைக்கு ஹெல்தியா இருக்கேன்… தேங்கஸ்’ என உங்களுக்கு நீங்களே சொல்லிக்கோங்க. SHARE IT.