News August 27, 2025
ஸ்டாலினுக்கு பிஹார் சமூகநீதி ஞானம் வழங்கும்: அன்புமணி

பிஹாரில் நடைபெற்ற பிரசார பயணத்தில் CM ஸ்டாலின் பங்கேற்றார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட X பதிவில், இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்ட மாநிலம் பிஹார் என்றும், அத்தகைய பிஹார் மண் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என எதிர்பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார். சென்னை திரும்பியதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த CM உத்தரவிடுவார் என நம்புவோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
Similar News
News August 27, 2025
உக்ரைன் – ரஷ்யாவிற்கு பேரழிவு ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் -ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தாவிட்டால் இருநாடுகள் மீதும் பொருளாதார போர் தொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், இது பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை செய்தும், புடினும், ஜெலன்ஸ்கியும் அதற்கு பிடிகொடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 27, 2025
2 ஆண்டுகளில் HIV-க்கு தடுப்பூசி

HIV தொற்று நோய்க்கான ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி இன்னும் 2 ஆண்டுகளில் தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மரபணு ரீதியில் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் எனவும், வைரஸை தடுக்கும் வகையில் உடல் செல்களுக்கு மரபணு வழிகாட்டல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சில அமெரிக்க மருத்துவ நிறுவனங்களும் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன.
News August 27, 2025
Parenting: இத செஞ்சா உங்க குழந்தை உங்க பேச்ச கேட்கும்..

உங்கள் குழந்தை உங்கள் பேச்சை மதிப்பதே இல்லை என கவலையா? இந்த சிம்பிள் விஷயங்கள் உங்கள் மேல் உள்ள அவர்களது பார்வையை மாற்றும். ▶ காலையில் குழந்தையை அன்பாக எழுப்புங்கள் ▶அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயத்தையும் பாராட்டவும் ▶உணவு நேரத்தை இனிமையாக்குங்கள் ▶குழந்தைகள் முன் சண்டை வேண்டாம் ▶மற்றவர்கள் முன் அவர்களை திட்டக்கூடாது ▶கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட வேண்டாம். SHARE IT.