News October 26, 2025
பிஹார்: INDIA கூட்டணி தேர்தல் வாக்குறுதிகள்

பிஹார் எதிர்க்கட்சிகளின் CM வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், ₹50 லட்சத்திற்கு காப்பீடு திட்டம். முடி திருத்தம் செய்பவர்கள், தச்சர்கள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக, குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
Similar News
News October 27, 2025
தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலம் ஆகும்: சீமான்

தமிழ்நாட்டில் SIR மேற்கொண்டால், இதுவும் இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும் என சீமான் தெரிவித்துள்ளார். இந்தி பேசக்கூடிய வடமாநிலத்தவர்கள் இங்கு ஒன்றரை கோடி பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு இங்கு வாக்குரிமை கொடுத்து பாஜகவிற்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தமிழர்களை சொந்த மாநிலத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
ராசி பலன்கள் (27.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 27, 2025
BREAKING: இந்தியா ஆட்டம் மழையினால் ரத்து

Women’s CWC-ல் இந்தியா, வங்கதேசம் இடையிலான ஆட்டம் மழையினால் ரத்தானது. மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் 27 ஓவர்களாக குறைக்கப்பட, முதலில் ஆடிய வங்கதேசம் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. DLS விதிப்படி இலக்கு 126 ரன்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா 57 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.


