News October 1, 2025
பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கு பின் பிஹாரில் இறுதி வாக்காளர் பட்டியலை ECI வெளியிட்டுள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் கூடுதலாக 3.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 21.53 லட்சம் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மொத்தத்தில் 47 லட்சம் பெயர்கள் குறைந்துள்ளன.
Similar News
News October 1, 2025
உருவானது புயல் சின்னம்.. கனமழை கொட்ட போகுது

மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
News October 1, 2025
முடிந்தால் அரஸ்ட் பண்ணுங்க.. போலீசுக்கு சவால்!

முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள் என தெலுங்கு பட பைரஸியில் ஈடுபடும் ‘Ibomma’ தளத்தின் அட்மின் போலீசுக்கு சவால் விட்டுள்ளார். தங்களின் தளத்தை முடக்கினால், 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இந்தியர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக குறிப்பிட்டு, படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி மக்களை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News October 1, 2025
₹6 செலுத்தினால் ₹1 லட்சம் கிடைக்கும் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ திட்டத்தில், 1 நாளைக்கு ₹6 பிரீமியமாக செலுத்தினால் 5 வருடங்கள் கழித்து ₹1 லட்சம் வரை கிடைக்கும். இது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பதால் அவர்கள் பெயரில்தான் கணக்கு தொடங்கமுடியும். இதற்கு, குழந்தைகள் 5-20 வயதிற்குள்ளேயும், பெற்றோர்கள் 45 வயதிற்கு மிகாமலும் இருக்கணும். இந்த திட்டத்தை தொடங்க அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு போங்க. SHARE.